உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை அள்ள வருவதில்லை: மக்கள் குமுறல்

 குப்பை அள்ள வருவதில்லை: மக்கள் குமுறல்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகளில் குப்பை வாங்க வருவதில்லை என்று மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தாத காரணமாக, நாளுக்கு நாள், குப்பை தேங்கி வருவதால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆங்காங்கே குப்பைமலை போல் தேங்கி வருகிறது. இச்சூழலில், திருப்பூர் மாநகர குடியிருப்பு பகுதி யில் வீடுகளில் மக்களிடம் குப்பையை சேகரிக்க பணியாளர்கள் வருவதில்லை என்ற புகார் தொடர்கிறது. அன்றாடம் வந்த துாய்மை பணியாளர்கள், தற்போது முறையாக வருவதில்லை. இதனால், வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டு, பொது இடங்களில் கொட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வார்டு கவுன்சிலர்களிடம் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நடவடிக்கை எடுப்பதாக ஒற்றை வார்த்தை கூறி, நழுவி விடுகின்றனர். குப்பை பிரச்னையால் பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !