உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 50வது வார்டு பிரச்னைகளை கமிஷனரிடம் அடுக்கிய மக்கள்

50வது வார்டு பிரச்னைகளை கமிஷனரிடம் அடுக்கிய மக்கள்

திருப்பூர்; மாநகராட்சி 50வது வார்டில், அடுக்கடுக்கான பிரச்னைகளால், மக்கள் சிரமப்பட்டு வருவதால், அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என மக்கள் மனு அளித்தனர்.வார்டு பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் அளித்த மனு:எங்கள் வார்டுக்கு உட்பட்ட பெரியதோட்டத்தில், ஒன்பது வீதிகள் உள்ளன. இரு வாரங்களுக்கு ஒரு முறை சாக்கடை துார்வாரப்பட்டாலும், அரைகுறையாகவே துார்வாரப்படுகிறது. இதனால், குடியிருப்புவாசிகளுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. ரோட்டின், இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள், கான்கிரீட் ரோடு கழிவுகள் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.குடிநீரும், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். புஷ்பா நகர், அண்ணா நகர் பகுதியில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ரோடு முழுவதுமாக சேதமடைந்து ள்ளது.இடையூறாக உள்ள மதுக்கடையை மாற்ற வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை