உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அசல் பத்திரம் மீட்டுத்தர போலீசில் மக்கள் மனு

அசல் பத்திரம் மீட்டுத்தர போலீசில் மக்கள் மனு

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கே.அய்யம்பாளையம் ஊராட்சி. ராஜீவ் காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பல்லடம் போலீசில் அளித்த புகார் மனு விவரம்:கடந்த, 35 ஆண்டுக்கு மேலாக, குடும்பத்துடன் வசிக்கிறோம். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவரான வேலுசாமி என்பவர், 1988ல், 50 குடும்பத்தினரிடம் பணம் பெற்று கொண்டு, 4.50 ஏக்கர் பூமியை அனைவருக்குமாக பிரித்து கொடுத்தார். மீதமுள்ள இடத்தை அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள உறுதி அளித்தார்.இதனால், அரசு மானியத்துடன் ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால், இன்றுவரை, அசல் பத்திரம் தரவில்லை. இது குறித்து கேட்கும் போதெல்லாம் சரியான பதில் சொல்வதில்லை. இதற்கிடையே, நாங்கள் வழித்தடமாக பயன்படுத்தி வந்த நிலத்தை, வேறொருவருக்கு வேலுசாமி விற்று விட்டதாக கூறி கம்பி வேலி அமைக்க முயன்றனர்.இது தொடர்பாக பல்லடம் தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார்.ஆனால், வேலுசாமிக்கு ஆதரவாக தாசில்தார் அறிக்கை அளித்துள்ளார். எனவே, 35 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் எங்களுக்கு அசல் பத்திரத்தை பெற்று தருவதுடன், எங்களுக்கு சேர வேண்டிய பாதையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.புகாரை தொடர்ந்து, பல்லடம் இன்ஸ்பெக்டர் மாதையன், வேலுசாமியிடம் இது குறித்து விசாரித் தார். 'சட்டரீதியாக சந்தித்துக் கொள்வதாக அவர் கூறியதை தொடர்ந்து, நீங்களும் சட்டரீதியாகவே சந்தித்துக் கொள்ளுங்கள்,' என, புகார் அளித்த பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை