உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு வார்டு சபா மனு அளித்த மக்கள்

சிறப்பு வார்டு சபா மனு அளித்த மக்கள்

அவிநாசி: அவிநாசி நகராட்சியில் சிறப்பு வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பங்கேற்று தங்கள் அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கையை மனுவாக அளித்தனர். முதல் கட்டமாக 1, 6, 7, 9, 12 மற்றும் 15வது வார்டு என ஆறு வார்டு களில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. அந்தந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியின் தேவைகளான கழிவு நீர் கால்வாய் புதிதாக கட்டுதல், குப்பைகளை சுத்தம் செய்தல், சாக்கடை புதுப்பித்தல்,தெருவிளக்கு மற்றும் ரோடுகளை சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வார்டு கவுன்சிலரிடம் மனுக்களாக அளித்தனர். இன்று, 2, 4, 8, 11, 14 மற்றும் 18 ஆகிய வார்டுகளுக்கான சிறப்பு வார்டு சபா கூட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ