உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்ல காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த மக்கள்

நல்ல காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த மக்கள்

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் என்பதால், பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டது.அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள அனுமதியை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி, சமூக நல அமைப்பினர் கலெக்டரிடம் அளித்த மனு:அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கலெக்டர் அனுமதி அளித்தள்ளார். தலைமை ஆசிரியரோ, மாணவியருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி, பெற்றோர், மாணவியர் மத்தியில் பதட்டத்தை உருவாக்கி, நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுத்துவருகிறார்.தனிநபர் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு, சட்ட விதிகளுக்கு முரண்பாடாக தலைமை ஆசிரியர் செயல்படுகிறார். மக்கள் மத்தியில் வீண் வதந்தி பரப்பி, நடை பயிற்சிக்கு முட்டுக்கட்டை போடும் தலைமை ஆசிரியர் புனிதவதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி வளாகத்தில், காலை, 5:30 முதல் 7:30 மணி வரை நடை பயிற்சி, உடற் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.'கல்வித்துறை அதிகாரி களுடன் பேசி, காலை, 7:20 மணி வரை நடை பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படும்,' என, கலெக்டர் தங்களுக்கு உறுதி அளித்ததாக, மனு அளித்த சமூக நல அமைப்பினர் தெரிவித்தனர்.சில அரசு அலுவலர்கள், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. காலதாமதமாக வருவது, மாதத்தில் ஓரிரு கூட்டங்களில் மட்டும் பங்கேற்பது; பாதியிலேயே புறப்பட்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்றைய கூட்டத்திலும், அரசு அலுவலர்கள் பலரும் பங்கேற்கவில்லை. இதனால், கூட்ட அரங்கில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ