குழாயை மாற்ற மக்கள் போராட்டம்
உடுமலை; குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கோழிக்குட்டை. கிராமத்துக்கு திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பற்றாக்குறையாகவே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. எனவே, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயை மாற்றியமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'கிராமம் வழியாக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், புதிதாக பிரதான குழாய் அமைத்து, மாற்று இடத்துக்கு கொண்டு செல்கின்றனர். அதே குழாயில், கிராமத்துக்கும் குடிநீர் வினியோகிக்க வேண்டும்,' என்றனர். திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, நேற்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.