உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளர் பணி நிரந்தரம்; சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

தொழிலாளர் பணி நிரந்தரம்; சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

திருப்பூர்; திருப்பூரில் சி.ஐ.டி.யு., மாநில நிர்வாகக்குழு கூட்டம், மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா, 50 சதவீத வரி விதிப்பால் உள்நாட்டு ஏற்றுமதி தொழில்கள், கடுமையாக பாதிப்புக்குள்ளாகி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. சுய சார்பு பாதுகாக்கும் அரசியல் நிலைபாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்.நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தொழில்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; தொழிலாளர் களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் துாய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை, பேச்சு வார்த்தை வாயிலாக தீர்வு காண வேண்டும். மக்களை தேடி மருத்துவம், டெங்கு ஒழிப்பு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் ஹவுஸ்கீப்பிங், பரிசோதனை கூடங்கள் உள்ளிட்ட பணிகளில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியம், ஊக்கத்தொகை என குறைந்த ஊதியத்தில், சட்ட சலுகையின்றி பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி