உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பஞ்சலிங்க அருவிக்கு அனுமதி; சுற்றுலா பயணியர் உற்சாகம்

 பஞ்சலிங்க அருவிக்கு அனுமதி; சுற்றுலா பயணியர் உற்சாகம்

உடுமலை: நீர் வரத்து சீரானதால், நான்கு நாட்களுக்குப்பிறகு, பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பிரசித்தி பெற்ற பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், உருவாகும் சிற்றாறுகள் ஒருங்கிணைந்து பஞ்சலிங்க அருவியாய் மாறி, அடிவாரத்திலுள்ள திருமூர்த்தி அணையுடன் சேர்கிறது. கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், அருவிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அருவிக்குச்செல்ல தடைவிதிக்கப்பட்டது.அருவிக்குச்செல்லும் வழித்தடத்தில், தடுப்பு ஏற்படுத்தி, கண்காணிப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். நான்கு நாட்களாக தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அருவியில் நீர் வரத்து சீரானது. பாதுகாப்பான அளவில், நீர் வரத்து இருந்ததால், அருவியில் குளிக்க சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணியரும், சபரிமலை பக்தர்களும், அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை