உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு 

வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு 

உடுமலை : வீட்டு மனை பட்டா கேட்டு, பண்ணைக்கிணறு ஊராட்சி மக்கள் உடுமலை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.குடிமங்கலம் ஒன்றியம், பண்ணைக்கிணறு ஊராட்சியில், முக்கூடுஜல்லிபட்டி, பண்ணைக்கிணறு மற்றும் கோழிக்குட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் வசிக்கும் வீடு இல்லாத மக்கள், நீண்ட காலமாக வீட்டு மனை பட்டா கேட்டு வருகின்றனர்.நேற்றுமுன்தினம் உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு, 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் வந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.மனுவில், 'விவசாய கூலி தொழிலில், ஈடுபட்டுள்ள பெரும்பாலான குடும்பத்தினருக்கு சொந்த வீடு இல்லை. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ