மேலும் செய்திகள்
அவிநாசி தேரோட்டம்; பாதுகாப்பு சிறக்க ஆலோசனைகள்
29-Apr-2025
அவிநாசி: அவிநாசி கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், கடந்த 8, 9, 10 ஆகிய நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டம் நடந்த போது, மேற்கு ரத வீதியின் பல இடங்களில் பழுதானது.இத்தனைக்கும், சில நாள் முன்னர் தான், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால், பெரிய தேரின் சக்கரம் ஏறத்தாழ ஒரு அடி மண்ணில் புதைந்ததால், 2 மணி நேரம் தாமதமாக நிலை சேர்ந்தது.இதுதொடர்பாக, புதுப்பாளையம், ராயம்பாளையம் சன்னை மிராசுகள் நேற்று நகராட்சி தலைவர் தனலட்சுமியிடம் அளித்த மனுவில், 'சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார் சாலை மிகவும் தரம் குறைவாக இருந்ததால் பல இடங்களில் பழுதாகி தேர் ஓடும்போது சிரமமாக இருந்தது. எனவே, கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.
29-Apr-2025