விநாயகர் சிலையுடன் மனு
திருப்பூர்; கலெக்டர் அலுவல கத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பாரத மாணவர் பேரவை அமைப்பினர், கையில் விநாயகர் சிலையோடு பங்கேற்றனர். பாரத மாணவர் பேரவையினர் கலெக்டரிடம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, கூடுதல் இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு, புதிய இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கவேண்டும். பல்லடத்தில், கொசவம்பாளையம் ரோடு மற்றும் அனுப்பட்டியில் பட்டத்தரசி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் சிலை வைக்க அனுமதி அளிக்கவேண்டும்.