ஓதிமலைக்கு பாத யாத்திரை
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அடுத்த இரும்பறை கிராமத்தில் 1,860 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்கு அவிநாசி அடுத்த செம்பாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஓதிமலை முருகன் பக்தர்கள் பாதயாத்திரை காவடிக்குழு சார்பில் 10வது ஆண்டாக காவடி பாதயாத்திரை புறப்பட்டனர். சூளையில் உள்ள வில்வ விநாயகர் கோவிலில் இருந்து பாதயாத்திரை துவங்கியது.முன்னதாக வில்வ விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தைப்பூச தினமான இன்று ஓதிமலை முருகனை தரிசிக்கின்றனர்.