குழாய் உடைப்பு; சாலை சேதம்; குப்பை தேக்கம்
வீணாகும் தண்ணீர்ராயபுரம் அடுத்த, சூசையா புரம் எட்டாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- குணசேகரன், சூசையாபுரம்.சாய்ந்த மின் கம்பம்மண்ணரை, ரேவதி தியேட்டர் ரோட்டில், விழும் நிலையில், சாய்ந்தபடி மின்கம்பம் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும்.- நடராஜன், தியாகி குமரன் காலனி.கால்வாய் அடைப்புகரைப்புதுார் ஊராட்சி, முல்லை நகரில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் சுத்தம் செய்ய ஊழியர்கள் வருவதில்லை.- வினு, முல்லை நகர்.எப்படி நடப்பது?கணபதிபாளையம், ஸ்ரீநகரில் சாலையில் மண் செறிந்துள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் சேறும், சகதியுமாக மாறி பாதசாரிகள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ரோடு அமைக்க வேண்டும்.- சுப்ரமணி, கணபதிபாளையம்.வாகனங்கள் தடுமாற்றம்திருப்பூர், செல்வலட்சுமி நகரில் சாலை சேதமாகியுள்ளது; சரிவர மண் கொட்டாமல் குழியாக அப்படியே விட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- லோகநாதன், செல்வ லட்சுமி நகர்.n திருப்பூர், பல்லடம் ரோடு, தற்காலிக தினசரி மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் சாலை சேதமாகியுள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறு கின்றனர்.- முத்துக்குமரன், பல்லடம் ரோடு.வழிநெடுகக் குப்பைபல்லடம், வடுகபாளையம் புதுார், திருவள்ளுவர் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். வழிநெடுகக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- ஏசுதுரை, திருவள்ளுவர் நகர்.இங்கேயா கொட்டுவது?திருப்பூர், பூ மார்க்கெட் வீதி பின்புறம் குப்பை கொட்ட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்திலேயே, வியாபாரிகள் குப்பை கொட்டுகின்றனர்.- தாமோதரன், திருப்பூர்.