உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீட்கப்பட்ட குழந்தை தத்து மையத்தில் சேர்ப்பு

மீட்கப்பட்ட குழந்தை தத்து மையத்தில் சேர்ப்பு

திருப்பூர் ; திருப்பூரில் கடந்த வாரம் குப்பை தொட்டியில் இருந்த மீட்கப்பட்ட ஆண் குழந்தையை சேலத்தில் உள்ள தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் சிறுபூலுவபட்டி, அம்மன் நகர் தாய் மூகாம்பிகை காலனியில் கடந்த வாரம் துணி சுற்றிய நிலையில் ஆண் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்டு இருந்தது.இதுகுறித்து தகவலறிந்த வேலம்பாளையம் போலீசார் குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சூழலில், குழந்தை நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், குழந்தையை மருத்துவமனையில் இருந்து விடுவிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்தனர். தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை, திருப்பூர் குழந்தைகள் நலக்குழு முன்னிலையில், சேலம் தத்துவள மையத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும், குழந்தை குறித்து தகவல் தெரிந்தால் வரும், 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம். 0421-2971198, 70929-96127 எண்களில் தொடர்பு கொள்ளலாம். யாரும் தொடர்பு கொள்ளாத பட்சத்தில் குழந்தை சட்டப்படி தத்துக்கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை