நடக்காத ஊரக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டில் முறையிட திட்டம்
பொங்கலுார்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி அறிக்கை:ஊரக உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கான பதவிக்காலம் முடிந்து சிறப்பு அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஊரக உள்ளாட்சிகள் இயங்குகின்றன.மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை அரசு ஊழியர்களை வைத்து செய்து வருவது, மாநில அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு ஒப்பானதாகும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., தனது ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தலை முடக்கியுள்ளது. இது அதிகார மீறல்.தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்கள் ஊராட்சி அலுவலகங்களுக்கு வருவதில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. மக்கள் பிரச்னை தீரவில்லை.அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தி.மு.க., தவிர்க்குமானால்உயர்நீதிமன்றத்திற்கு செல்வோம்.