உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி சாகுபடிக்கு நடவு பணி தீவிரம்

காய்கறி சாகுபடிக்கு நடவு பணி தீவிரம்

உடுமலை; தொடர் மழை பெய்து வருவதால், காய்கறி சாகுபடிக்கான நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை உடுமலை வட்டார விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை வட்டாரத்தில், கிணற்று பாசனத்தை பயன்படுத்தி, பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இந்தாண்டு துவக்கத்தில், போதிய மழை இல்லாததால், காய்கறி சாகுபடி பரப்பு குறைந்து, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்தது.கடந்த வாரத்தில், உடுமலை வட்டாரத்தில், பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, காய்கறி சாகுபடிக்கான நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தக்காளி நாற்று நடவு அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றுகளை நடவு செய்கின்றனர். தற்போது பெய்து வரும் மழை, செடிகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை சீசனில், காய்கறி உற்பத்திக்கு தகுந்த சீதோஷ்ண நிலை இருக்கும். இந்த சீசனில் வழக்கத்தை விட, கூடுதல் பரப்பில், நடவு செய்ய வாய்ப்புள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை