உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை டிக்கெட் நிறுத்தம்

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை டிக்கெட் நிறுத்தம்

சேலம்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், நடைமேடை டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: தீபாவளியை முன்னிட்டு ரயில்வே ஸ்டேஷன்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக திருப்பூர் ஸ்டேஷனில் அதிகரிக்கும் பயணியர் எண்ணிக்கையால், அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதனால் நடைமேடைகளில் நெரிசலை தடுக்க, அக்., 15(நேற்று) முதல், 23 வரை, திருப்பூர் ஸ்டேஷனில் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது. பயணியரை வழி அனுப்ப வருபவர்கள், நடைமேடை வரை செல்லாமல், கூட்ட அரங்க பகுதியிலேயே திரும்ப வேண்டும். அதேபோல் பயணியரை அழைத்துச்செல்பவர்களும் அங்கேயே காத்திருக்க வேண்டும். பயணியரின் வசதிக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு, மக்கள், பயணியர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை