உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாட்டோஸ் பள்ளி கால்பந்தில் பிரமாதம்

பிளாட்டோஸ் பள்ளி கால்பந்தில் பிரமாதம்

திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறு மைய அளவில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கால்பந்து போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி, 14 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டிலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தோஷ், சுரேஷ் மற்றும் சரண்யா ஆகியோருக்கு பள்ளி தாளாளர் ஹரி கிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !