ஊழல் தடுப்போம் உறுதிமொழியேற்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசு துறை அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு நடந்தது. மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில், நடந்த நிகழ்ச்சியில், உதவி கமிஷனர் தங்கவேல்ராஜன், மாமன்ற செயலாளர் அமல்ராஜ், நகர திட்டமிடுநர் சுப்புத்தாய் உள்ளிட்டோர் முன்னிலையில், ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுஉறுதிமொழி ஏற்றனர்.