மேலும் செய்திகள்
சாலை வரி உயர்வு கண்டித்து வேலை நிறுத்தம்
11-Apr-2025
தனியார் பஸ் கட்டணம் அடுத்த வாரம் உயர்வு?
09-Apr-2025
பல்லடம்:வாடகை உயர்வை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், ஐந்து நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். கோவை, திருப்பூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்க பொறுப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது:விலைவாசி உயர்வுக்கேற்ப ஆண்டுதோறும் அகழ் இயந்திரங்களின் வாடகை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்புக்குப் பின், மூன்று ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை.டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனங்களின் விலை, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்டவற்றால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டிரைவர் சம்பளம், வாகன பராமரிப்பு உள்ளிட்டவற்றால் செலவுகள் அதிகரித்துள்ளன. வாடகை கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஒரு மணி நேர கட்டணமாக, குறைந்தபட்சம், 3,000 ரூபாயும், அதற்கு மேல் ஒரு மணி நேரத்துக்கு, 1,100 ரூபாயும் வாடகையாக பெறப்பட்டு வருகிறது. எதிர் வரும் நாட்களில், கூடுதலாக இயக்கப்படும் ஒரு மணி நேர வாடகையை, 1,400 ரூபாயாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் வாடகை கட்டண உயர்வை ஏற்க மறுக்கின்றனர். இதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த எர்த் மூவர்ஸ் இயந்திர உரிமையாளர்கள், 14ம் தேதி வரை ஐந்து நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் 1.50 லட்சம் அகழ் இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்
11-Apr-2025
09-Apr-2025