உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுவனிடம் அத்துமீறல் இளைஞர் மீது போக்சோ

சிறுவனிடம் அத்துமீறல் இளைஞர் மீது போக்சோ

அவிநாசி: அவிநாசி, நேரு வீதியை சேர்ந்தவர், சுரேஷ்குமார் 38. இவரது நண்பர் வீட்டில் 13 வயது சிறுவன் தனியாக இருந்துள்ளார்.அப்போது நண்பரின் வீட்டுக்கு சென்ற சுரேஷ்குமார், தனியாக இருந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்துள்ளார். அவிநாசி அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுவனின் தாய் புகார் அளித்தார்.அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை 'போக்சோ' பிரிவின்கீழ் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.அவரின் உத்தரவின்பேரில், சுரேஷ்குமாரை, போலீசார் அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி