உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய அரசின் சாலை வரி உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசின் சாலை வரி உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில். நான்கு இடங்களில், ஜே.சி.பி., பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், குண்டடம், மானுார்பாளையம், சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பொக்லைன் இயந்திரங்கள், அதன் உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ், சாலை வரி உயர்வு போன்ற காரணங்களால், இயந்திர வாடகை உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை, மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர்கள் கூறுகையில், 'கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு சாலை வரியை உயர்த்திக் கொண்டே வருகிறது.இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொக்லைன் இயந்திர வாடகை, முதல் ஒரு மணி நேரத்திற்கு 3,000 ரூபாயும், தொடர்ந்து வரும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், 1,500 ரூபாயும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !