உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

இழப்பீடு வழங்காததால் பஸ் ஜப்தி

வெள்ளகோவில், ஓலப்பாளையம், சோழவலசை சேர்ந்தவர் நடராஜ், 60. இவர் கடந்த, 2019ல், ஓலப்பாளையம் அருகே டூவீலரில் சென்ற போது, அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். இதுகுறித்து நடராஜ் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், இழப்பீடாக, 2 லட்சத்து, 35 ஆயிரத்தை வட்டியுடன் வழங்க கோர்ட் கடந்த ஆண்டு ஜன., 27ல், உத்தரவிட்டது.இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காங்கயம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பஸ்சை, ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

இளம்பெண் தற்கொலை

வெள்ளகோவில் சிவக்குமார் நகரை சேர்ந்தவர் தியாகராஜன், 35. இவரது மனைவி சவிதா, 27. திருமணமாகி, 11 ஆண்டுகளாகிறது. மூன்று பெண் குழந்தைகள் உள்ள னர். சவிதாவுக்கு வீட்டுக்கு அருகில் உள்ள, ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த, 20 நாட்களாக தம்பதி மீண்டும் சேர்ந்தனர். இளம் பெண்ணிடம் பழகிய நபர், மீண்டும் பேச முயன்று வந்தார். மனமடைந்த அப்பெண் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.திருட முயற்சித்தவருக்கு கவனிப்புவெள்ளகோவில் எல்.கே.சி., நகரை சேர்ந்தவர் பாப்பா, 68; சலவை தொழில் செய்து வந்தார். இவரது வீட்டுக்கு டூவீலரில் வந்த, இருவர், துணி தேய்த்து கொடுக்கும்படி கொடுத்து விட்டு சென்றனர். இரவு, 10:00 மணியளவில் பாப்பாவின் வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி வீட்டுக்குள் ஒருவர் குதித்தார். அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து, 'கவனித்து', போலீசில் ஒப்படைத்தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

போன் பறித்த 3 பேருக்கு 'கவனிப்பு'

ஊத்துக்குளியை சேர்ந்தர் ராமசந்திரன், 36. கவுண்டம்பாளையம் ரோட்டில் டூவீலரில் சென்ற போது, அவ்வழியாக வந்த, மூன்று பேர், அவரின் மொபைல் போனை பறித்தனர். பொதுமக்கள் மூன்று பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கோல்டன் நகரை சேர்ந்த சல்மான், 24, சண்முகம், 26, பரமேஸ்வரன், 26 என, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !