மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
30-Dec-2024
ஊதியூர், கொடுவாய் ஸ்ரீராம் நகரில் சிலர் சேவல் சூதாட்டாத்தில் ஈடுபடுவதாக ஊதியூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட, நாகராஜ், 42, ரவி, 54, சரவணகுமார், 34, விஜயகுமார், 39, சாமிநாதன், 56, வலுாப்பூரான், 60, மோகன்ராஜ், 40 என, ஏழு பேரை கைது செய்து, ஒரு கார், 12 டூவீலர், 2 சேவல், 4 ஆயிரத்து, 500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.கள்ளச்சாராயம்; 3 பேர் கைது
வெள்ளகோவில் போலீசார், சக்திபாளையத்தில் ரோந்து மேற்கொண்டபோது சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி வருவது தெரிந்தது. சாராயம் குடித்து கொண்டிருந்த சக்திவேல், 46, சாராயம் வாங்கி கொடுத்தாக வெள்ளகோவியை சேர்ந்த சேகர், 52, ஜெயக்குமார், 38 என, மூன்று பேரை கைது செய்து, டூவீலர், 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைதான ஜெயக்குமார் கடந்த, நான்கு மாதங்களாக தோட்டத்தில் காய்ச்சி வருவது தெரிந்தது.தாராபுரம் மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் நகை அபேஸ்
திருப்பூர் இரண்டாவது ரயில்வே கேட்டை சேர்ந்தவர் கலைவாணி, 22; பனியன் தொழிலாளி. பி.என்., ரோடு அருகே தோழி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்சில் வந்தார். கைப்பையில் இருந்த, 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.குழந்தையிடம் அத்துமீறல்
ஈரோட்டை சேர்ந்த பெண், மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கோவில் திருவிழா, பண்டிகை காலங்களில் பானிபூரி வியாபாரம் செய்வது வழக்கம். தற்போது, பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் சென்று வருவதால், நத்தக்காடையூர் அருகே பானிபூரி கடை போட்டு வியாபாரம் செய்து வந்தார். பெண்ணின், நான்கு வயது குழந்தையிடம், கடைக்கு அருகே உள்ள செக்யூரிட்டி சண்முகம், 62 என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
30-Dec-2024