போலீஸ் டைரி: உதவியாளர் பலி
உதவியாளர் பலி காங்கயம், கரூர் ரோடு கே.ஜி.கே., நகரை சேர்ந்தவர் முருகன், 57; காங்கயம் யூனியன் அலுவலக உதவியாளர். காங்கயம், முத்துார் ரோட்டில் தனது டூவீலரில் சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதில் முருகன் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர். சூதாட்டம்; 5 பேர் கைது கொடுவாயில் பணம் வைத்து சூதாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொடுவாய் சக்தி விநாயகர் புரத்தில் ரகசிய சோதனை செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட கொடுவாயை சேர்ந்த மாரப்பன், 60, குமார், 39, சாமிநாதன், 50, சுப்பிரமணி, 50, நாகராஜ், 40, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 4 ஆயிரம் ரூபாய் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர். கார் மோதி ஒருவர் பலி ஊத்துக்குளி, செங்கப்பள்ளியை சேர்ந்தவர் தனபால், 45, சென்னியப்பன், 33 ஆகியோர் டூவீலரில் காடபாளையம் - கவுண்டம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அதே ரோட்டில் நல்லுாரை சேர்ந்த ஹரிஷ், 20 என்பவர் காரை ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக, டூவீலர் மீது கார் மோதியது. டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த சென்னியப்பன் பரிதாபமாக இறந்தார். தனபால் காயமடைந்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.