போலீஸ் டைரி:மின் கசிவால் தீ விபத்து
மின் கசிவால் தீ விபத்து திருப்பூர், செரங்காடு பகுதியில் பயன்பாடின்றி பூட்டிய நிலையில் ஒரு குடோன் உள்ளது. அதில், ஏற்பட்ட மின்சார கசிவால் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து விரைந்த தெற்கு தீயணைப்பு துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். இதனால், அசம்பாவிதம்எதுவும் ஏற்படவில்லை. வேன் டிரைவர் தற்கொலை காங்கயம் அருகிலுள்ள கல்லாங்காட்டு புதுாரைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ், 23. சரக்கு வேன் டிரைவர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர். பைக் மோதியதில் ஒருவர் பலி திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதுாரைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ், 46. காங்கயம் - கரூர் மெயின் ரோட்டில் ஓலப்பாளையம் அருகே பைக்கில் சென்ற போது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் காயமடைந்தார். காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில், காங்கயம்போலீசார் விசாரிக்கின்றனர். வட மாநில தொழிலாளி பலி ஒடிசாவைச் சேர்ந்தவர் டிரானாசூனா, 47. வெள்ளகோவிலில் உள்ள ஆயில் மில்லில் வேலை செய்து வந்தார். நடேசன் நகர் பகுதியில், கோவை - கரூர் மெயின் ரோட்டைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.