மேலும் செய்திகள்
டூவீலர் - கார் மோதல்; 4 பேர் படுகாயம்
19-Mar-2025
காங்கயம், சிவன்மலை அடிவாரத்தில் உள்ள காடுகளில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. தற்போது வெயில் காரணமாக, இந்த புற்கள் காய்ந்த நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து சென்ற காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். யாராவது பற்ற வைத்து சென்றனரா அல்லது புகைப்பிடித்து வீசி சென்றனரா, என காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர். மின்சாரம் தாக்கி முதியவர் பலி
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, அணைக்காடு, என்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராமசாமி, 75. இவருக்கு சொந்தமான தோட்டம், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் வெள்ளிமலை அருகே உள்ளது. நேற்று தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி ராமசாமி உயிரிழந்தார். அவரது மகன் கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற இருவர் கைது
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த அஜ்மல் கான், 37, கண்ணப்பன், 25 என, இருவரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, இருவரை கைது செய்தனர். டூவீலர் திருடியவர் கைது
திருப்பூர்-சாமுண்டிபுரம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. இவர் கடந்த, 14ம் தேதி மாமனார் வீட்டு முன்பு டூவீலர் நிறுத்தி சென்றார். மறுநாள் பார்த்த போது டூவீலர் திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில், வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர். டூவீலரை திருடிய ராஜசேகர், 27 என்பவரை கைது செய்து, டூவீலரை மீட்டனர். தனியார் பஸ் விபத்து இருவர் காயம்
ஈரோட்டில் இருந்து பயணிகளுடன் திருப்பூர் நோக்கி தனியார் பஸ் நேற்று காலை வந்தது. ஊத்துக்குளி அருகே கொடியாம்பாளையம் நால்ரோடு அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டிலிருந்த மையத்தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த சேலம், சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி, 62, தர்மபுரியை சேர்ந்த சுரேஷ், 41 ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Mar-2025