மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
30-May-2025
மதுவுக்கு அடிமையான தொழிலாளி தற்கொலைபி.என் ரோடு, நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சிவராஜ், 51; பனியன் தொழிலாளி. மனைவி பிரிந்து சென்றார். மதுவுக்கு அடிமையானார். வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியானார்.டிரைவரை தாக்கிய 2 பேர் கைதுதிருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன், 29; டிரைவர். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் இருந்தது. பெண்ணின் கணவர் குணசேகரன், 39 கண்டித்தார். கோபமடைந்த அந்த பெண், பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நண்பர்கள் விக்னேஷ், மணிமாறன் ஆகியோரை அழைத்து சென்று பிரபாகரனை குணசேகரன் தாக்கினார். காயமடைந்த பிரபாகர் நல்லுார் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து குணசேகரன், விக்னேஷ், 33 ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைதுதிருப்பூரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர், சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவருக்கு, தற்போது 21 வயதாகிறது. தத்தெடுத்து வளர்த்த நபருக்கு, 17 வயதில் ஒரு மகள் உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி, மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.மைனர் பெண் திருமணம்; பெற்றோர் மீது வழக்குகருவம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 28. கடந்த, மூன்று மாதம் முன்பு பெற்றோர் சம்மதத்துடன், 17 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது. சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதும், சிறுமிக்கு, 18 வயது பூர்த்தியடையவில்லை என்பதும் தெரிந்தது. இதுதொடர்பாக டாக்டர்கள் சமூகநலத்துறை, சைல்டு லைன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் கணவர் மற்றும் இருவரின் பெற்றோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.மொபைல் போன் திருடியவர் சிக்கினார்பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 40; பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் புதிய பஸ் ஸ்டாண்டில் துாங்கி கொண்டிருந்தார். வாலிபர் ஒருவர் இவரது மொபைல்போனை திருடி கொண்டு தப்பியோடினார். பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 36 என்பது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.தாய் பெற்ற கடனை அடைக்க திருடியவர் பிடிபட்டார்குண்டடத்தை சேர்ந்தவர் பாலுமணி, 37. இவரது வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், 5 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார். புகாரின் பேரில், குண்டடம் போலீசார் விசாரித்தனர். ஊதியூர், ஆண்டிபுதுாரை சேர்ந்த சம்பத்குமார், 19 என்பவர் பணம் திருடியது தெரிந்தது. தாய்க்கு கடன் தொல்லை உள்ளதால், கடனை அடைப்பதற்காக திருடியதாக போலீசாரிடம் தெரிவித்தார். வாலிபரை குண்டடம் போலீசார் கைது செய்தனர்.
30-May-2025