உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் லைன் மாரியம்மன் பஞ்சுதிரி அம்மனாக அவதாரம்

போலீஸ் லைன் மாரியம்மன் பஞ்சுதிரி அம்மனாக அவதாரம்

திருப்பூர்; திருப்பூர் பனியன் தொழில் நலன் வேண்டி, போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில், நுால்கோன், பனியன் ரோல் கொண்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள், திருவிழா கோலம் பூண்டுள்ளன. ஒவ்வொரு கோவிலிலும், சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன், ஸ்ரீபஞ்சுதிரி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதுகுறித்து கோவில் அர்ச்சகர் பரமேஸ்வரன் கூறுகையில்,''பக்தர்கள் விரும்பும் வகையில், ஒவ்வொரு விழாக்காலத்திலும் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. ஒட்டுமொத்த பனியன் தொழில் நலன் வேண்டி, ஸ்ரீபஞ்சு திரி அம்மன் அலங்கார பூஜை நடந்துள்ளது. நுால் கோன்கள், பனியன் ரோல் மற்றும் மலர் மாலைகளால், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பனியன் தொழிலும், தொழிலாளர்களும், பொதுமக்களும் நன்றாக இருக்க வேண்டுமென, பொது பிரார்த்தனையும் நடந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை