உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி...

திருப்பூர்; திருப்பூர், வீரபாண்டி காளிக்குமாரசாமி கோவில் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., சுந்தரராஜன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு போலீஸ் யுவராஜ் உடனிருந்தனர்.காளிக்குமாரசாமி கோவில் பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, 'டூ வீலரில்' மூன்று பேர் அதிவேகமாக சென்றனர். சந்தேகம் அடைந்த போலீஸ் யுவராஜ், தனது 'டூ வீலரில்' துரத்திச் சென்றார். கோவில் வழி பெருந்தொழுவு ரோடு அருகே சென்ற போது, முன்னாள் சென்ற 'டூ வீலர்' மீது, வேகமாக மோதியுள்ளார். அதில் பயணித்த யோகேஷ் ராஜ், 27, நவீன் 21, மகேந்திரன் 29, ஆகியோர் படுகாயமடைந்தனர்.விபத்து ஏற்படுத்திய போலீஸ் யுவராஜுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் மீது, போக்குவரத்து குற்ற புலனாய்வுத்துறை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை