மேலும் செய்திகள்
ஆட்டோவை திருடி சவாரிக்கு சென்றவர் கைது
09-Aug-2025
திருப்பூர்; சென்னை, கிளாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரீஷ்குமார், 24. திருப்பூர், இடுவம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவருடன் அப்பகுதியினர் சிலர் தகராறு செய்துள்ளனர். இது குறித்து தட்டிக்கேட்க ஹரீஷ்குமார், முல்லை நகர் பகுதிக்கு சென்றார். தகராறு குறித்து விசாரித்த போது அங்கிருந்தோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியது. மரக்கட்டை மற்றும் கத்தியால் ஹரீஷ்குமார் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிந்து மோகன்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தேடுகின்றனர். ஆட்டோ டிரைவருக்கு மிரட்டல்
திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார், 38. கோவில் வழி பஸ் ஸ்டாண்ட்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஸ்டாண்டில் சவாரிக்கு காத்திருந்தார். அங்கு வந்த தமிழ்மணி, 38, பாண்டித்துரை, 42, செந்தில், 41, ஆகியோர் சரவணகுமாரிடம் ராஜா என்ற டிரைவர் குறித்து விசாரித்தனர். 'நான் சவாரிக்கு சென்றதால் ராஜாவை பற்றி தெரியாது' என்றார் சரவணகுமார். மூன்று பேரும் தங்களிடமிருந்த அரிவாளை காட்டி மிரட்டியதோடு, ஆட்டோவின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.
09-Aug-2025