உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியே வசிக்கும் முதியவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய போலீசார்

தனியே வசிக்கும் முதியவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய போலீசார்

அனுப்பர்பாளையம்; பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து தோட்டத்து வீடுகளில் வசித்து வருபவர்களிடம் போலீசார் கொலை, கொள்ளையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பெருமாநல்லுார் போலீசார் நேற்று அவர்களது எல்லைக்குட்பட்ட 10 ஊராட்சி பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகளில் வசித்து வரும் முதியோர்களை சந்தித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அவர்களிடம் வீடுகளில் 'சிசிடிவி' பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை சுற்றி மின் விளக்குகளை எரிய விட வேண்டும். வளர்ப்பு நாய்கள் வைத்திருக்க வேண்டும். அவசர காலங்களில் '100' என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். நகை மற்றும் பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை