காப்பகத்தில் இருந்து தப்பிய 3 சிறுமியரை மீட்ட போலீசார்
திருப்பூர்; திருப்பூர், லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. சிறுமிகள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.கடந்த 3ம் தேதி இரவு, காப்பகத்தில் இருந்து, 15 முதல் 18 வயது வரை உள்ள, ஐந்து சிறுமியர், சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். அதில், தாராபுரத்தில் ஒருவர், ஈரோட்டில், இருவர் என, மூன்று பேரை மீட்டனர். மேலும், இருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.