உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயற்கையை போற்றும் பொங்கல் விழா! இது ஊக்கம்.. இது முன்னேற்றம்.. இது ஆன்மிகம்.. இது உற்சாகம்

இயற்கையை போற்றும் பொங்கல் விழா! இது ஊக்கம்.. இது முன்னேற்றம்.. இது ஆன்மிகம்.. இது உற்சாகம்

திருப்பூர்; தமிழ் பண்பாடு துவங்கிய பின்நெடுங்காலத்துக்கு முன்பே, இயற்கையை நேசித்தும், கவனித்தும், பாதுகாத்தும் வந்தனர் நம் மக்கள். அந்த நெருக்கத்தின் மகிழ்வு பெருக்கம் தான் பொங்கல் விழா. தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்துடன், இயற்கையும், பறவை, விலங்கினங்களும் இரண்டற கலந்துள்ளன.காடு, மலை, மேடு என பல்வேறு இடங்களுக்கும் சென்று, பல்வேறு வகை மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் காய், கனிகளை பறவைகள் உண்கின்றன. அவற்றில் எச்சத்தில் இருந்து அந்த காய், கனி தரும் மரம், செடி, கொடிகள் முளைக்கும். இவ்வாறு, பல்லுயிர் பெருக்கத்துக்கான உணவுச்சங்கிலியில், பறவைகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.இயற்கையை போற்று பொங்கல் விழாவில், பறவைகள் கணக்கெடுப்பில் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.தமிழக பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெகநாதன் கூறியதாவது:பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் சூழல் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் நோக்கில் தான், ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் பறவை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 14ம் துவங்கி (இன்று) அடுத்த 3 நாட்களுக்கு, அவரவர் பகுதியை சுற்றியுள்ள ஏரி, குளம், ஆறு, தோட்டம், பள்ளி, கல்லுாரி, அலுவலக வளாகம், வீட்டுமாடி என எந்த பகுதியிலும், என்னென்ன வகை பறவைகள் வருகின்றன என குறைந்தது, 15 முதல், 20 நிமிடங்களுக்கு பார்க்க வேண்டும். அந்த பறவைகளின் பட்டியலை http://ebird.org/india என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இந்த இணையதளம், உலகளாவிய பறவைகள் குறித்த பதிவுகளை உள்ளடக்கியிருக்கும். இதில் உள்ள தரவுகளின் அடிப்படையில் தான் பறவைகளின் வாழ்வியல் சூழல், எந்தெந்த பகுதியில் என்னென்ன பறவையினங்கள் உள்ளன என்பது போன்ற தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதற்கேற்ப தான் பறவைகளை பாதுகாப்பதற்கு, நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ