பொங்கல் பானை விலை உயர்வு
திருப்பூரில் பொங்கல் பானை விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பித்தளை ஒரு கிலோ எடை கொண்ட பொங்கல் பானை 1100 - 1200 ரூபாய்; எவர்சில்வர் 300 - 450 ரூபாய்; செம்பு 1,300 -1,350 ரூபாய் என விற்கப்படுகிறது. ஆயிரத்து 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ''திருப்பூரில் உருளி பானை, நாட்டு தவளை, களி பானை, தக்காளி பானை போன்ற பொங்கல் பானைகளை பொது மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கடந்த முறையை ஒப்பிடும்போது, ஒரு கிலோவிற்கு 50 முதல் நுாறு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.அதுபோக பானையின் டிசைனுக்கேற்பவும் விலையில் மாற்றம் ஏற்படும்'' என்றார்.