உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் சிறப்பு பஸ்கள் 10ம் தேதி முதல் இயக்கம்

பொங்கல் சிறப்பு பஸ்கள் 10ம் தேதி முதல் இயக்கம்

திருப்பூர் : கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு, 4,449 பஸ்கள் உட்பட, பிற பகுதிகளுக்கும் சேர்த்து, 13 ஆயிரத்து, 183 பஸ்கள் இயக்கப்பட்டன.நடப்பாண்டும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்களை ஜன., 10ல் துவங்கி, 13 வரை இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்துள்ளது. சொந்த ஊர் சென்றவர் மீண்டும் திரும்ப ஏதுவாக, 17 இரவு துவங்கி, 19 வரை சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிக்கு இயக்கப்பட உள்ளது.''பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் தொடர்பாக ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை இறுதி கட்ட ஆலோசனைக்கு பின் போக்குவரத்து அமைச்சர் சிறப்பு பஸ் விபரத்தை அறிவிப்பார். பஸ்கள் நிற்குமிடம், முன்பதிவு உள்ளிட்ட விபரங்கள் அதில் இடம் பெறும். தற்போது, தொலைதுாரம் (300 கி.மீ., க்கும் அதிகமாக) பயணிக்கும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. அவ்வழித்தடங்களில் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, கூடுதல் பஸ்கள் அறிவிக்கப்படும்'' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !