மேலும் செய்திகள்
போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம்
27-Jun-2025
திருப்பூர்; உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.கலெக்டர் மனிஷ் நாரணவரே, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், 100 பேர் பங்கேற்று, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர். ஊர்வலம், தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி வரை சென்று திரும்பியது. அதன்பின், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.மக்கள் தொகை விழிப்புணர்வு பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற, மாணவ, மாணவியர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மக்கள் தொகை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இளம் வயது திருமணம், இளம் வயது கர்ப்பம், இரு குழந்தைகளுக்கான இடைவெளி குறித்து, சிலம்பம் குழுவினர், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
27-Jun-2025