உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று மின் நிறுத்தம் ஒத்திவைப்பு

இன்று மின் நிறுத்தம் ஒத்திவைப்பு

திருப்பூர்: திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் அறிக்கை:திருப்பூர் கலெக்டர் அலுவலக துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதி, கருப்பகவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர்., தோட்டம் பகுதிகளில் 19ம் தேதி (இன்று) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.நிர்வாக காரணங்களுக்காக, கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்தில் 19ம் தேதி மின் நிறுத்தம் ஏற்படாது.இதேபோல், பசூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகின்றது. இன்று மின் நிறுத்தம் கிடையாது; வினியோகம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை