பள்ளியில் போஷன் பக்வாடா நிகழ்ச்சி
உடுமலை; சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், போஷன் பக்வாடா நிகழ்ச்சி நடந்தது.உடுமலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், போஷன் பக்வாடா நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) தீபா தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் இன்பகனி முன்னிலை வகித்தார்.குழந்தைகளின் உடல்நலம் குறித்து, பெற்றோருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.