மின் நிறுத்தம் ஒத்திவைப்பு
அவிநாசி:சேவூர், தெக்கலுார் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, இன்று (7ம் தேதி) நடைபெறவிருந்த மின் நிறுத்தம் தவிர்க்க இயலாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை வழக்கம்போல சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்கும், என அவிநாசி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.