மேலும் செய்திகள்
மின் திருட்டுக்கு துணை போகும் ஆளுங்கட்சி புள்ளி!
02-Apr-2025
திருப்பூர்; செக் மோசடி வழக்கில், நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் திருப்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார். திருப்பூர், அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவஞானமூர்த்தி, 45. பனியன் நிறுவன உரிமையாளர். நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன், இவரிடம் 25 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகவும், 25 லட்சம் ரூபாய் கமிஷனை அட்வான்சாக தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதைப் பெற்றுக் கொண்டு, கடன் வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார்.இதற்காக சீனிவாசனிடம் பெறப்பட்ட காசோலைகளும், வங்கி கணக்கில் பணம் இன்றி திரும்பியது. திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் சீனிவாசன் மீது சிவஞானமூர்த்தி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு சீனிவாசன் நேற்று ஆஜரானார்.
02-Apr-2025