உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துணை கமிஷனருக்கு அதிகாரம்; மாநகராட்சி ஊழியர்கள் நிம்மதி

துணை கமிஷனருக்கு அதிகாரம்; மாநகராட்சி ஊழியர்கள் நிம்மதி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய பவன்குமார் பதவி உயர்வு வழங்கி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்று 3 வாரங்களுக்கு மேலாகியும், புதிய கமிஷனர் நியமிக்கப்படவில்லை. துணை கமிஷனர் சுந்தரராஜனுக்கு கூடுதலாக கமிஷனர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், நிதி ஆதாரங்களை கையாளும் அதிகாரம் வழங்கப்படவில்லை.தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மாநகராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்க வழியில்லாத நிலை ஏற்பட்டது. அலுவலர்கள், ஊழியர்களுக்கு நடப்பு மாதத்துக்கான சம்பளம் வழங்குவது கேள்விக்குறியானது. மின் கட்டணம் உள்ளிட்ட அலுவலக செலவினங்களை எதிர்கொள்வதும், வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.இதனால், அலுவலர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், மாநகராட்சி துணை கமிஷனர் சுல்தானாவுக்கு சில அதிகாரங்களை வழங்கி, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ