பிரதோஷ வழிபாடு
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.ஆனிமாதம் இரண்டாவது பிரதோஷமான நேற்று, சிவாலயங்களில் மஹா அபிேஷக பூஜைகள் நடந்தன. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மூலவர், அதிகாரநந்தி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மஹா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரபூஜை நடந்தது.வெள்ளி ரிஷப வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், வெளிபிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி, பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர், சாமளாபுரம் சோழீஸ்வரர், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்கள் உள்ளிட்ட சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு நடந்தது.