உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணப்பையை ஒப்படைத்த நேர்மை தம்பதிக்கு பாராட்டு

பணப்பையை ஒப்படைத்த நேர்மை தம்பதிக்கு பாராட்டு

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் - காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கட்டட கான்ட்ராக்டர். மனைவி அம்சவேணியுடன் நேற்று முன்தினம், மருத்துவ சிகிச்சைக்காக கோவை செல்ல அரசு பஸ்சில் சென்றார்.கருமத்தம்பட்டி அருகே சீட்டின் கீழே ஒரு பை இருப்பதை பெருமாள் பார்த்து எடுத்துள்ளார். அதில், 40 ஆயிரம் ரூபாய் பணமும், கனரா வங்கி கணக்கு புத்தகம் இருப்பதும் தெரிந்தது.சிகிச்சை முடித்துவிட்டு மாலையில், அவிநாசி திரும்பியதும் வங்கி கணக்கு புத்தகத்தில் இருந்த குன்னத்துார் - பாரதி நகரை சேர்ந்த கலாமணி என்பவரிடம் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு, பணப்பை கிடைத்த விவ ரத்தை சொல்லி, அவிநாசி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு வந்த கலாமணியிடம், டி.எஸ்.பி., சிவகுமார் முன்னிலையில், பணப்பையை பெருமாள் ஒப்படைத்தார். பணத்தை கண்ணீர் மல்க பெற்றுக்கொண்ட கலாமணி, பெருமாள் மற்றும் அம்சவேணிக்கு நன்றி தெரிவித்தார்.பெருமாள் மற்றும் அம்சவேணி தம்பதியினரின் நேர்மையை பாராட்டும் வகையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, எஸ்.ஐ.,கள் வேலுசாமி, அமல் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை