திருமுறை இசை பயிற்சி மாணவர்களுக்கு பாராட்டு
திருப்பூர்: திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை நடத்தும், திருமுறை இசை பயிற்சி வகுப்பில், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இப்பள்ளி மாணவர்கள், 2024 - 2025ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஹார்வி குமாரசாமி திருமண மண்டப உரிமையாளர் கிருஷ்ணகுமார், அறக்கட்டளையின் உறுப்பினர் செந்தில்குமார் நன்மாணாக்கராக தேர்வாகிய மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி, துணைத் தலைவர்கள் 'கீதாலயா' முருகசாமி, 'டிக்சன்' குப்புசாமி, செயலாளர் 'கீதாஞ்சலி' கோவிந்தப்பன், பொருளாளர் 'ஓகே' கந்தசாமி, இணை செயலாளர் துரைசாமி, பள்ளி முதல்வர் சுமதி உள்ளிட்டோர், இசை பயிற்றுவித்த ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியரை பாராட்டினர்.