ஆயக்கால் கட்டை தயாரிப்பு
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு கந்த சஷ்டி விழா கோலகலமாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பங்கேற்கின்றனர். இவ்வாண்டு சஷ்டி விழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரவிழா வரும், 27ம் தேதி நடக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள, நான்கு வீதிகளிலும், முருகப்பெருமான் போரிட்டு சூரபத்மன் தலையை கொய்வார். இதில் தேருக்கு, சப்போர்டாக வைக்க ஆயக்கால் கட்டைகள் புதிதாக செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.