முந்தைய மின் கட்டணம் செலுத்த அறிவுரை
திருப்பூர்; காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளர் விமலாதேவி அறிக்கை:காங்கயம் மின் கோட்டம், முத்துார் பிரிவுக்கு உட்பட்ட, எம்.கே., வலசு பகிர்மானத்தில், எம்.கே., வலசு, ரங்கப்பையன்காடு, காந்திநகர், முருகம்பாளையம், இடைக்காட்டுவலசு, அமராவதிபாளையம், பாரதிபுரம், இச்சிக்காட்டுவலசு, வாய்க்கால்பாலம், புஷ்பகிரி, ராசாத்தாவலசு, அத்தப்பம்பாளையம் புதுார் பகுதி மின் இணைப்புகளில் நிர்வாக காரணத்தால் ஏப்., மாதம் மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.அப்பகுதி மின் நுகர்வோர் கடந்த பிப்., மாதம் செலுத்திய கட்டணத் தொகையை, ஏப்., மாதத்துக்கு செலுத்த வேண்டும்.