உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / படியூரில் ஆரம்ப சுகாதார மையம் திறப்பு  விழா

படியூரில் ஆரம்ப சுகாதார மையம் திறப்பு  விழா

காங்கயம்; காங்கயம் படியூர் ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட சுகாதார மையங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.சென்னை அடையாறு சாஸ்திரி நகர் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கணொலி காட்சி வாயிலாக பல்வேறு மையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.அவ்வகையில் காங்கயம், படியூர் மற்றும் குளத்துப்பாளையத்தில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், மாநகராட்சி பகுதியில் 10 நல வாழ்வு மையங்கள்; பூண்டி மற்றும் பல்லடத்தில் இரு மையங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டது.இதற்கான விழா படியூரில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 5 பேருக்கு மருந்து பெட்டகம், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியன வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி