மேலும் செய்திகள்
கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
04-Apr-2025
திருப்பூர்; ஒராண்டாக இழுபறியாக இருந்த எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் பணியிடம் நிரப்பபட்டுள்ளது. இனி, 2025 - 2026ம் கல்வியாண்டுக்கான பணிகள் வேகமெடுக்குமென எதிர்பார்க்கலாம்.மாநிலத்திலேயே அதிக மாணவியர் படிக்கும் அரசு கல்லுாரிகளில் இரண்டாமிடத்தில் உள்ள திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் பணியிடம் ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருந்தது.இளங்கலை, முதுகலை படிப்பில், 1,086 இடங்களை கொண்ட இக்கல்லுாரி முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதாக, மேம்பாட்டு பணி பாதிக்கப்படுவதாக, 'தினமலர்' நாளிதழில் கடந்த ஏப்., 18ல் செய்தி வெளியானது.இந்நிலையில், உயர்கல்வித்துறை, மாநிலம் முழுதும், 22 அரசுக் கல்லுாரி முதல்வர் பணியிடங்களை மாற்றி வெளியிட்ட உத்தரவின் படி, மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லுாரி முதல்வராக இருந்த ஸ்ரீகானப்பிரியா, திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதே நேரம் முதல்வர்களாக பணியாற்றி வந்த, அவிநாசி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் நளதம், சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரிக்கும், காங்கயம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் நசீம்ஜான், வாலாஜாபேட்டை அரசு மகளிர் கலைக்கல்லுாரிக்கும் முதல்வராக மாற்றப்பட்டுள்ளனர்.இதனால், இவ்விரு கல்லுாரிக்கும் தற்காலிக முதல்வர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.
04-Apr-2025