உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விளிம்பு நிலை பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

 விளிம்பு நிலை பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

திருப்பூர்: தமிழக அரசின் மகளிர் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திட்ட அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்து பேசுகையில், ''மகளிர் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளிம்பு நிலை பெண்களுக்கு அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலர்கள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மகளிர் திட்டத்தில், திருப்பூர் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக முன்னேற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை